ஐபிஎல் 2020 தொடருக்கு முன், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்?

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் வந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தொடரில் விளையாடும்போது கொரோனா தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டது. தரம்சாலா போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் இரு அணிகளும் இன்னும் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை செப்டம்பர் 26-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை முழுத்தொடரையும் நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது.

போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெறும் காலம் தீபாவளி நேரம் என்பதால் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது.

இதனால் ஒளிபரப்பு உரிமத்தில் ஸ்டார் நிறுவனத்தை சந்தோசப்படுத்தும் வகையில் ஐபிஎல் தொடருக்கு முன் தென்ஆப்பிரிக்காவுடன் ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ விரும்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஸ்டார் தென்ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உரிமத்தையும் பெற முயற்சி மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுகிறது.

ஒருவேளை இந்தத் தொடர் நடைபெற்றால் இந்திய அணி வீரர்கள் முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் விளையாட செல்ல வேண்டும்.

இதனால் வீரர்களின் ஒர்க்லோடு அதிகமாகும் என்பதையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும். இதனால் உறுதியாக தொடர் நடத்தப்படுமா? என்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தால்தான் உறுதியாகும்.

முகநூலில் நாம்