
எச். வினோத் – அஜித் கூட்டணியில் 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. ட்ரைலர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க முடிந்தது.துணிவு படம் கொப்பியா?அதன்படி, ஹாலிவுட்டில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த இன்சைட் மேன் படத்தின் பிரதி என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனால், ஹாலிவுட் வரை செல்ல தேவையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது ஏனென்றால், நம்ம கோலிவுட்டில் வெளிவந்த பல கதைகளை கொப்பியடித்து தான் துணிவு உருவாகியுள்ளதாம். ஆம் சிவாஜி, ஜென்டில் மேன், வில்லன், நாணயம், பீஸ்ட் ஆகிய படங்களின் கொப்பி தான் துணிவு என கூறப்படுகிறது.