எல்லயில் இடம்பெற்ற லொறி விபத்தில் சாரதி பலி!

எல்ல-வெல்லவாய வீதியில், நேற்று (18) இரவு லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி மரணமடைந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையைச் சேர்ந்த ஒருவரே, விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளையிலிருந்து கல்முனை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறி, இராவணா எல்ல பிரதேசத்தில் வைத்து வீதியைவிட்டு விலகிச் சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்