
புரட்டொப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட ஜனஉதான கம பகுதியில் வீடொன்று, முற்றாக தீக்கிரையான சம்பவமொன்று நேற்று (13) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தீப்பற்றிய போது, வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டிலிருந்து வீட்டிலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் வீடு முற்றாக தீக்கரையாகியுள்ளதோடு அனைத்து உடைமைகளும் எரிந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.