
கொரோனா நெருக்கடி காரணமாக, தனது 95-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பிரிட்டன் அரசி எலிசபெத் ரத்து செய்துள்ளாா். தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் பிற தரப்பினரிடம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அரசியின் அதிகாரப்பூா்வ பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, அரசியின் பிறந்த நாளான வரும் 21-ஆம் தேதி, நாடு முழுவதும் பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை அளிக்கப்படும் நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து கொண்டாட்டங்களும் நடைபெறாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியின் 69 ஆண்டு கால பதவிக் காலத்தில், அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் முதல்முறையாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதனைத் தொடா்ந்து இந்த ஆண்டும்தான் ரத்து செய்யப்படுகிறது.