
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து 4.01 சதவீதத்தால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண திருத்தம் நாளை சனிக்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துக்கும் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்க ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
இதற்கமைய தற்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச 30 ரூபாய் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமலிருக்க பேருந்து சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டண திருத்த படிவம் நாளை முதல் சகல பேருந்துகளிலும் காட்சிப்படுத்தப்படும்.
அதன்படி, தற்போது 37 ரூபாவாக உள்ள கட்டணம் 38 ரூபாவாகவும், 48 ரூபாவாக உள்ள கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.