எரிபொருள் வரிசையில் மோதலில் ஒருவர் பலி!

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்