எரிபொருள் வரிசையில் கொலை – 7 பேர் கைது!

காலி, மாகால்ல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற இளைஞன் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 சந்தேக நபர்களில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2 பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் காலி, வஞ்சாவல பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்