
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் கொள்வனவிற்காக குவிவதனால் வீதி போக்குவரத்து தினமும் சீரற்று காணப்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை நகர்பகுதி ,சாய்ந்தமருது மாளிகைக்காடு ,பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை தொடர்வதற்கு காரணம் முறையான வழிகாட்டல்கள் முகாமைத்துவம் இன்மை போன்றன இன்மையால் இச்சீர்கேடு தொடர்ந்து வருகின்றது.
ஒரே நேரத்தில் இவ்வாறு எரிபொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் தத்தமது வாகனங்களை நிறுத்தி பொதுப்போக்குவரத்தை தடை செய்யும் வண்ணம் தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் இச்செயற்பாடு கடந்த 2 மாதங்களாகவே தொடர்ந்து வருகின்றது.