எரிபொருள் நெருக்கடி: தனியார் பொது போக்குவரத்தில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை வாகனங்கள் என்பன உரிய முறையில் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்கள் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுகின்றன.

நேற்றிரவு(07) வரை பல தனியார் பஸ்கள், எரிபொருள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும்(08) குறைந்தளவு பஸ்களே சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்