எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடுமையான மோதல்

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில்  4 பேர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்