எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாருக்கு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டினை இரண்டு மாதங்களில் தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதி எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் கட்டுப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவை வரும் நவம்பர் மாதம் முதல் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு அமைய இதுவரை 24 நிறுவனங்களிடமிருந்து கேள்வி பத்திரத்துக்கான இணக்க மனு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்