எரிபொருள் இன்மையால் வாழ்வாதாரத்தை இழக்கும் கிளிநொச்சி கடற்றொழிலாளர்கள்

கிளிநொச்சியில் கடற்றொழில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான
கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்மையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக
கவலை தெரிவித்துள்ளனர்.

பூநகரி, பளை, கண்டாவளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழில்
நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது என்றும் இந்நிலைமையினை பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற
போதும் இதுவரை எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த
அவர்கள்

இனியும் பொறுவாய்ந்தவர்களை நம்பி எரிபொருளுக்காக காத்திருந்தால் தமது
குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாத நிலைமை ஏற்படும் என்பதனால் தாம்
பண்டையகாலத்து முறைப்படி பாய்மர படகு தொழில் நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற
முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவேதான் தாம் தமது படகுகளில் பெட்சீட், மற்றும் பலமான துணியினை கட்டி
கரையோர கடற்றொழிலில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளதாகவும், தெரிவிக்கும் அவர்கள்
தமது கடலில் இந்திய இழுவைப் படகுகள் கண்முன்னே தொழில் நடவடிக்கைகளில்
ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்