எரிபொருளுக்காக காத்திருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அரச அதிபர் வேண்டுகோள்

   

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் படியும் எரிபொருளுக்காக காத்திருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து தங்களை பார்த்துக் கொள்ளுமாறு அரச அதிபர் வேண்டுகோள் 

 
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஏற்றவாறு விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை எரிபொருளினை  விவசாய அமைச்சின் ஊடாகவும்  மின் வலுச்சக்தி அமைச்சின் ஆகியோர்களால் குறித்து தொகுக்கப்பட்டு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடாக எரிபொருள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


அதே வேலை விவசாயிகளுக்கு வேண்டியதாக சிறுபோக பயிர்ச்செய்கை காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட  விவசாயிகளுக்கு 222 மெற்றிக் தொன் அசேதனப் பசளைகள்  வழங்கப்பட்டுள்ளது.


மேலும் கருத்து தெரிவிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது வருகின்ற 1ம் திகதி QR கோட் நடை முறையை பின்பற்றி எரிபொருள் பெற்றுக் கொள்ளுமாறு  மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


இதே போன்று கிளிநொச்சி மாவட்டதின் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் கரைச்சி தெற்கு  பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் எரிபொருள் வழங்க எண்ணியுள்ளோம்.


அரசாங்கத்தினால் சுகாதாரசேவை நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய இப்போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ‘கொவிட்-19’ அங்கங்கே இனங்காணப்பட்ட காரணத்தாலும் எங்கள் மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் உள்ள வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளது. எனவே குறிப்பாக அதிகம் மக்கள் கூடுகின்ற இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு விரையமாக கேட்டுக்கொள்கின்றேன்.

இப்போது மாவட்டத்திலே எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு விரையமாக கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்