எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்

டோனியுடனான அனுபவங்கள் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்தீவ் பட்டேல்,‘‘டோனி கடைசி 2 நிமிடங்களில்தான் அணியின் கூட்டத்தை நடத்துவார். 2008-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடத்தில்தான் கூட்டத்தை நடத்தினார்.

அவர் 2019-ம் இறுதிப் போட்டியிலும் அப்படித்தான் அணியின் கூட்டத்தை நடத்தியிருப்பார் என உறுதியாகக் கூறுகிறேன். டோனிக்கு தெளிவாகத் தெரியும், எந்த வீரரிடம் இருந்து என்ன வேண்டும் என்று’’ என்றார்.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 302 ரன்களை குவித்தார். 2010-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பின்னர் கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் தான் டோனி மீது அதே மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்