
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர் காரணமாக 2008 ல் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறிய நிலையில் தமது
வளங்களையம் அதில் கிடைக்கும் வருமானங்களையும் இராணுவம் சுரண்டிவருவதாக
குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடற்தொழிலை நம்பியே வாழ்ந்துவரும் தமக்கு
காணிகள் இல்லாதமை பெரும்பின்னடைவு என்றும் கூறியுள்ளனர்.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் காணிவிடுவிப்பு தொடர்பாக பேசினாலும்
இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபடுவதாக
கூறியுள்ளனர்.