
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எமக்கான எமது உரிமைகள் மீறப்படுவது
தடுத்து தடைகள் நீக்கப்பட்டு எமது உறவுகளுக்கான விடுதலையை சர்வதேசம்
பெற்றுத் தர வேண்டும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தலைவி யோகராசா கலாரஞ்சனி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கிளிநொச்சி
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு
போராட்டம் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
அலுவலகத்துக்கு முன்பாக ஒன்றினை நடாத்தி இருந்தனர் இதன்போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தை
நாங்கள் பல தடவை எங்களுடைய கண்ணீருக்கு ஊடாக வழிகாட்டி இருக்கின்றோம்
இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்திலே எங்களுடைய மனித உரிமைகள்
மீறப்படுகின்றன இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் பாதுகாப்பு
படையினரின் அச்சுறுத்தல் எங்களுடைய இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு
தடையாகவும் உள்ளதுடன் அழுத்தங்களையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.
உண்மையாகவே யுத்தம் முடிந்து ஒரு பத்து பதினொன்றுந்து வருடங்களைத்
தாண்டிய போதும் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூற முடியாது கூற
முடியாத இந்த இலங்கை அரசின் ஊடாக எமக்கு பதில் கிடைக்காத போது நாம்
சர்வதேசத்தோடு பேசிக் கொண்டு இருக்கின்றோம் சர்வதேசத்தில் அந்த ஐநா
முன்றலில் எங்களுடைய உண்மை நிலைகளை எடுத்துக் கூறிக் கொண்டு
இருக்கின்றோம் ஆனால் சர்வதேசமும் காண முகம் போல் இருக்கின்றது எனிமேலும்
இந்த போராட்டத்தினை கொச்சைப்படுத்தாது எமக்கான நீதியை சர்வதேசம்
பெற்றுத்தர வேண்டும் என்றும்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேசம் எமக்கான தீர்வினை இலங்கை
அரசிடம் இருருந்து பெற்றுத்தர வேண்டும் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட எமது
பிள்ளைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் எம்முடன் போராடிய பல
தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடிய வண்ணம் இறந்துவிட்டார்கள் நாங்களும்
மரணத்தின் வாயிலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் இதனை சர்வதேசம்
கவனத்திலெடுப்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எமக்கான உரிமைகள்
மீறப்படுவது தடுத்து தடைகள் நீக்கப்பட்டு எமது உறவுகளுக்கான விடுதலையை
சர்வதேசம் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார்.