என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நான் தான் நடித்திருக்க வேண்டும், பிரபல நடிகை ஒபன் டாக்

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் மற்றும் கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தல அஜித்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தின் நடித்து வருகிறார்..

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 65% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தல அஜித், கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடிகள்.

அதில் த்ரிஷாவின் கதாபாத்திரம் தான் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு மிக முக்கியமான ஓன்றாக விளங்கியது.

ஆனால் நடிகை த்ரிஷா நடித்த அந்த கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடித்து நடிகை பார்வதி நாயர் தான் முதலில் நடிக்க இருந்ததாக அவரே பேட்டி ஒன்றில் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

முகநூலில் நாம்