என்னால் வர முடியாது – மஹேல ஜெயவர்தன அறிவிப்பு

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

வேறு ஒரு தினத்தை ஒதுக்கித்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு இந்த தகவலை மஹேல ஜெயவர்தனஅறிவித்துள்ளார்.

2011இல் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நேற்று குமார் சங்கக்காரவிடம் சுமார் 9 மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்