எனக்கு விஜய் கிட்ட இருந்து இந்த சீக்ரெட் தெரிஞ்சு ஆகணும், ரித்திக் ரோஷன் ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் கதாநாயகனாக மாறிவிட்டார் தளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படத்தின் டப்பிங் வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.

நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

தளபதி விஜய் நடிப்பைவிட நடனத்தில் மிக சிறந்தவர் என்பதனை நான் அறிவோம். அந்த விஷயத்தில் விஜய்யை புகழ்ந்து பேசாத ஆளே கிடையாது.

அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் இவருக்கு எங்களுது நடிகர் விஜய்யின் நடனத்தை பற்றி ஒரு வார்த்தை கூறுங்கள் என்று தொகுப்பாளர் கேட்க. அதற்கு பதிலளித்த ரித்திக் “எனக்கு தெரியவில்லை அவர் என்ன சீக்ரெட் வச்சுருக்காருனு, அவருடைய எனர்ஜி லவல் வேற மாதிரி இருக்கு. அதை நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். அதை நான் கற்று கொள்ளவும் ஆசை படுகிறேன் என்று வெளிப்படையாக கூறினார்.

முகநூலில் நாம்