எனக்கு ரஜினியை தெரியும் அதனால் எனக்கு சினிமா தெரியும், இளம் இயக்குனர் அதிரடி பேச்சு

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு தூண் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவரை பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் அல்லது நேர்காணல்களில் புகழ்ந்து பேசுவதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது அண்மையில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தை இயக்கி இருந்தவர் தேசிங் பெரியசாமி.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான் சூப்பர் ஸ்டார் அவர்களின் மிக பெரிய ரசிகன், என்னுடைய முதல் படத்தின் பவுண்டில் சூப்பர் ஸ்டாரின் போட்டோவை வைத்து, அவரின் கையெழுத்தை பெற்று தான் ஆரம்பித்தேன். எனக்கு சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மனிதரை தெரியும், அதனால் தான் எனக்கு சினிமா தெரியும்” என்று அதிரடியாக கூறினார்.

முகநூலில் நாம்