
நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும்
பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று
நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக
வலியுறுத்தியுள்ளன
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை
சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்,
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர
பீடத்தின் மகாநாயக்க தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ
பீடத்தின் மகாநாயக்க மல்குலாவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோரால்
கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.