எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளது.

முகநூலில் நாம்