எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பாடசாலை வாகனங்களுக்கு மஞ்சள் நிறப்பூச்சு கட்டாயம்!

பாடசாலை மாணவர்களுக்காக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறப்பூச்சு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள், பொலிஸாருடன் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

தற்போது மாணவர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றமையால், மஞ்சள் நிறப்பூச்சுகளை மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கக்கூடிய வேன் உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

முகநூலில் நாம்