எங்களுக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் சொல்கிறார்

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்எஸ் டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். அதேபோல் எம்எஸ் டோனி பினிஷர் பணியில் மாஸ்டர். இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.

முகநூலில் நாம்