
காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.
பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தேயிலை கொழுந்து, உரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு சட்டம் தாக்கம் செலுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினரால் தடை ஏற்படுத்தப்பட்டால் 119 அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 44 44 80 மற்றும் 011 2 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் தகவல் வழங்க முடியும் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தொவித்துள்ளார்.