ஊடகவியலாளாருக்கு எதிரான பொலீஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையினை கண்டிக்கின்றோம் – கிளிநொச்சி ஊடக அமையம்

பளை ஊடகவியலாளாரு்க்கு எதிரான பொலீஸாரின் திட்டமிட்ட   நடவடிக்கையினை
கண்டிக்கின்றோம் – கிளிநொச்சி ஊடக அமையம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த  ஊடகவியலாளர் நவரட்ணம்
சதீஸ் ( பளை ஈசா)  என்ற ஊடகவியலாளர் மீது பளை பொலீஸார் திட்டமிட்டு
பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளும் நடவடிக்கையினை கிளிநொச்சி ஊடக அமையம்
வன்மையாக கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது
இருக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி  அமையம் கோரியுள்ளது.

கடந்த 20.05.2022 அன்று பளையில் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற சமூக விரோதச்
செயற்பாடு தொடர்பில் பொலீஸாருக்கு அறிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு
பிரதேச இளைஞர்களுடன் சென்று தடுத்து நிறுத்திய  சம்பவத்தின ்போது
ஊடகவியலாளாருக்கு எதிராக சும்பவத்தில் ஈடுப்பட்ட இருவரால் பளை பொலீஸ்
நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை முறையாக விசாரித்து
நடவடிக்கை எடுக்காது, உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் எண்ணத்துடன்
சட்டத்தை  பயன்படுத்தி  ஊடகவியலாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட
பொலீஸாரின்  செயற்பாடுகள் மிகுந்த கவலையினை ஏற்படுத்தியிருக்கிறது.

பொலீஸாரின் இச் செயற்பாடுகள் காரணமாக பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சமூக
விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது  தொடர்பில்  பொது மக்களும், சமூக
நலன் விரும்பிகளினதும் சமூக பொறுப்பு எதிர்காலத்தில்  தடுத்து
நிறுத்தப்படுகின்ற ஆபத்தான நிலைமை உருவாக்கியுள்ளது. சமூக அநீதிகளுக்கு
எதிராக குரல் கொடுக்கும் ஊடகவியலாளாரின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும்
போது சமூகத்தின் ஏனைய தரப்பினர்களும் அடக்கபடுகின்ற சூழ் நிலையே
உருவாகும் எனபதனை வேதனையோடு தெரிவித்துக்கொள்வதோடு,

தவறு செய்கின்றவர்கள் மீது சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை
எடுக்கப்படுவதனை கிளிநொச்சி ஊடக அமையம் எச் சந்தர்ப்பத்திலும் கேள்வி
எழுப்பாது ஆனால்  பழிவாங்கும் எண்ணங்களுடன் சட்டத்தை பயன்படுத்துவதனை
நாம் எப்போதும் எதிர்ப்பதோடு. அதனை வன்மையாக கண்டிக்கவும் செய்வோம் என
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்