ஊசி மூலம் எண்ணெய் செலுத்தி தசைகளை பெரிதாக்கியவர் 55 ஆவது பிறந்தநாளில் மரணம்

ஊசி மூலம் தசை­க­ளுக்குள் எண்ணெய் செலுத்­திக்­கொண்டு, தனது தசை­களை பெரி­தாக்கி காண்­பித்­து­வந்த ஒருவர் 55 ஆவது பிறந்த தினத்தில் உயி­ரி­ழந்­துள்ளார். பிரே­ஸிலைச் சேர்ந்த வால்டிர் சேகட்டோ எனும் இந்­நபர்,  பல வரு­டங்­க­ளாக ஆபத்­தான எண்­ணெய்­களை ஊசி மூலம் தசை­க­ளுக்குள் செலுத்தி வந்தார் என நம்­பப்­ப­டு­கி­றது.

ஹொலிவூட் நட்­சத்­தி­ரமும் ஆண­ழகர் போட்­டி­களில் 7 தட­வைகள் மிஸ்டர் ஒலிம்­பியா பட்டம் வென்­ற­வ­ரு­மான ஆர்னோல்ட் ஸ்வாஷ்­நெ­கரும் கற்­பனை பாத்­தி­ர­மான ஹல்க்கும் தனது உட­லுக்கு உந்­து­சக்­திகள் என முன்னர் வால்டிர் சேகட்டோ கூறி­யி­ருந்­தனர்.

ஆனால், ஆர்­னோல்டைப் போன்­றல்­லாமல், குறுக்­கு­வ­ழியில் உடற்­த­சை­களை பெருப்­பிப்­ப­தற்கு வால்டிர் சேகட்டோ முயன்­று­வந்தார்.

வால்டிர் சேகட்­டோவின் நட­வ­டிக்கை தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் தனது புகைப்­ப­டங்­களை வெளி­யிட்டு வந்­தவர் வால்டிர். டிக்­டொக்கில் அவரை 17 லட்சம் பேர் பின்­தொ­டர்ந்­தனர்.

6 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே மருத்­து­வர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர். தொடர்ந்தும் அவர் தசை­க­ளுக்குள் எண்ணெய் செலுத்­தினால் அங்­கங்­களை அகற்­று­வ­தற்கு நேரி­டலாம் எனவும், குறைந்­த­பட்சம் நரம்புப் பாதிப்பு ஏற்­ப­டலாம் எனவும் மருத்­து­வர்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், தனது 55 ஆவது பிறந்த திகதி அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

அதி­கா­லையில் தனது அய­லவர் ஒரு­வரின் வீட்டு ஜன்­னலை தட்­டிய அவர், என்னை காப்­பாற்­றுங்கள் நான் இறந்­து­கொண்­டி­ருக்­கிறேன்’ எனக் கூறினார்.

வர் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட போதிலும், வைத்தியசாலை வரவேற்புப் பகுதியிலேயே அவர் மயங்கிவீழ்ந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்