
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திறைச்சேரியிடம் 770 மில்லியன் ரூபாவை
கோரியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு மொத்தமாக 10 பில்லியன் ரூபா
செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.
339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம்
9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பு 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய தேர்தல்கள்
ஆணைக்குழுவுக்கு திறைசேரி 37 மில்லியன் ரூபாவை ஏற்கெனவே ஒதுக்கியுள்ள
நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆணைக்குழு 770 மில்லியன்
ரூபாவை திறைச்சேரியிடம் கோரியுள்ளது.