உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7
மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38 /1/ A சரத்திற்கு அமைவாக,
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் இந்த அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி
மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்