உள்ளூராட்சி சபைத் தேர்தல்: பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஐதேக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP)
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து
பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித
ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி மன்றங்களில் யானைச் சின்னத்தில்
போட்டியிடவுள்ளதாகவும், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ரங்கே பண்டார தெரிவித்ததாக
லங்காதீப தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது சில உள்ளுராட்சி மன்றங்களில் இரு கட்சிகளும் பொது
சின்னத்தையே பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் போட்டியிடும் கட்சி சின்னங்களை
தீர்மானிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய
கட்சிக்கு இடையில் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்