
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத
இறுதியில் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட
கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டத்தின் 26 ஆவது உறுப்புரைக்கமைய
வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை இம்மாதத்தின் இறுதி வாரத்தில்
அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.