
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை
நிராகரிக்குமாறு கோரி இரண்டு இடை சீராய்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வதகல
மற்றும் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர
ஆகியோரினால் இந்த இரண்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது
பொருத்தமற்றது என தெரிவித்து இராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனு, சட்ட
அடிப்படை இல்லை என்றும் நியாயமான காரணங்களை முன்னிலைப்படுத்தவில்லை
என்றும் தெரிவித்துள்ளனர்.
மனுவில் தவறான தகவல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள
அவர்கள் எனவே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி
செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.