உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
அறியக்கிடைத்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் மத்திய
கால திட்டங்களை அடையாளங்காண்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய சபை உப
குழுவின் முதலாவது அறிக்கையில் இவ்விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
முறையான கலந்துரையாடலின் பின்னர், பொது இணக்கப்பாட்டின் பிரகாரம் அதனை
நடைமுறைப்படுத்த வேண்டுமென அந்த குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய
ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை
ஏற்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் மத்திய கால திட்டங்களை
அடையாளங்கண்டு பரிந்துரை செய்வதற்கான தேசிய உப குழு, பாராளுமன்ற
உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நியமிக்கப்பட்டது.
டிரான் அலஸ், வஜிர அபேவர்தன உள்ளிட்ட மேலும் 10 உறுப்பினர்கள் இந்த
குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.