உலக வர்த்தக மையத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்த ஆண்டு முதல் 400 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நீதி அமைச்சை, உலக வர்த்தக மையத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, உலக வர்த்தக மையத்தின் 35,071 சதுர அடி பரப்பளவு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரை அமைச்சிற்கு வாடகைக்கு விடப்பட உள்ளது.

கருவூலம் ஏற்கனவே 233,086,544 மற்றும் 174,075,701 ரூபாய்களை முறையே அடுத்த ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான வாடகைக்காக ஒதுக்கியுள்ளது.

இதேவேளை (House of Justice) திட்டத்தை செயற்படுத்த ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டம் முடிவடையும் வரை இடைக்கால தீர்வாக உலக வர்த்தக மையத்தின் பகுதியை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நிதி அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அறிய முடிகின்றது.

ஹல்ப்ட்ஸ்டார்ப் நகரில் உள்ள தற்போதைய நீதி அமைச்சின் கட்டிடத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பயன்பாட்டிற்கான நீதிமன்ற வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டதால் நீதி அமைச்சை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு சொந்தமான 400 மில்லியன் ரூபாயை, நீதி அமைச்சை ஒரு தனியார் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவு அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் செலவுக் குறைப்பு கொள்கைகளுக்கு முரணானது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்