உலக நீர் வளமும் உள்ளுர் நீர் பயன்பாடும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

உலக நீர் வளமும், உள்ளுர் நீர் பயன்பாடும், நீர் முகாமைத்துவமும் பற்றிய
மாணவர்களுக்கான  ஒரு நாள் விழிப்புணர் செயலமர்வு நேற்றைய தினம்
கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி நகர
றோட்டறிக் கழகத்தின் நிதி அனுசரணையில்  குறித்த செயலமர்வினை
நடாத்தியிருந்தது.

பாடசாலை முதல்வர் திருமதி ஜெயா மாணிக்கவாசகன்  தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் கிளி நொச்சி
முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் எஸ்.சாரங்கன், கிளிநொச்சி நகர
றோட்டறிக் கழகத்தின் தலைவர் வண. அருட்தந்தை ரி.யோசுவா ஆகியோர்   அறிமுக
உரையினையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்
உத்தியோகத்தர்களான மு. தமிழ்ச்செல்வன் உலக நீர் வளம், நீர் பயன்பாடு
பற்றியும், ஜனனு ஜனன்சந்த் நீரின் தரம், நோய்த்தாக்கங்கள் பற்றியும்,
அன்றூ பிரவீன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் பொது மக்கள்
உறவும், சேவைகள் பற்றியும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்
கிளிநொச்சி அலுவலக பொறுப்பதிகாரி சி. பாலகுமார் குழாய் வழி குடிநீர்
விநியோகம் நடைமுறைகளும் செயல் முறைகளும் பற்றியும் மாணவர்களுக்கு
விளக்கமளித்தனர்.

தரம் 9,10,11  மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட இச் செயலமர்வினை முன்னிட்டு
முன்னதாக மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நீர் தொடர்பான பேச்சுப் போட்டியில்
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் கலந்துகொண்ட அனைத்து
மாணவர்களுக்கான பங்குபற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கி
வைக்கப்பட்டதோடு, 45 நிமிடங்கள்  பரீட்சையும் நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி றோட்டறிக் கழகத்தை சேர்ந்த அதிபர் அ.
பங்கையற்ச்செல்வன், விதை நெல் ஆராச்சி  நிலையப் பணிப்பாளர் சிவநேசன்
திருமதி சிவநேசன், கிளிநொச்சி தெற்கு  கல்வி வலயத்தின் ஓய்வுப்பெற்ற
தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்