உலக தரப்படுத்தலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை ‘Contingent Liabilities from Natural Disasters Sri Lanka’ என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே உலக வங்கி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தினால் வருடாந்தம் வீடுகள், உட்கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் நிவாரணத்திற்காக 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்