உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெர்ரி விலகல்

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிதான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்ததால், இரு அணி வீராங்கனைகளும் முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் வீராங்கனையான எலிஸ் பெர்ரி மிட்-ஆஃப் திசையில் வந்த பந்தை பீல்டிங் செய்து வீசினார். அப்போது நிலைதடுமாறினார். அவரது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் திணறினார். அதன்பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

காயத்தின் தன்மை மிக அதிகமான அளவில் இருப்பதால் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

முகநூலில் நாம்