உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு , 5 பேர் உயிரிழப்பு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் , இந்நிதயா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில்  14,179 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்