உலகையே உலுக்கிவரும் கொரோனா – 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 88 ஆயிரத்து 441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.   

முகநூலில் நாம்