உலகில் 23.50 கோடி பேரை தாக்கிய கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23.50 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 235,097,455 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 48 லட்சத்து 6 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 211,850,561 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 18,440,700 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 44,443,405 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 718,984 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 33,816,494 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 9,907,927 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 33,791,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 448,605 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

உலக அளவில் 3 ஆவதாக பிரேஸிலில் 21,445,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலிகளைப் பொறுத்தவரை இதுவரை 5,97,292 போ் அந்த நோய்க்கு பலியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுதவிர, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஜொ்மனி, இந்தோனேசியா, போலந்து உள்ளிட்ட 35 நாடுகளில் தலா 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்