
உலகின் முதலாவது மருத்துவ பரிசோதனையில் மக்களுக்கு ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்தம், கொடுக்கப்பட்டதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஒரு சில ஸ்பூன்கள் கொண்ட மிகவும் சிறிய அளவு ரத்தம் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு, அது எவ்வாறு மனித உடலில் செயல்படுகிறது என்று பரிசோதிக்கப்பட்டது. மொத்தமாக ரத்தப் பரிமாற்றங்கள் எப்போதுமே மக்களை சார்ந்தே இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வருகின்றனர். மிகவும் அரிதான ரத்த வகைகளை தானமாக பெறுவது கடினமாக இருப்பதால் ரத்தம் தயாரிப்பதற்கான இறுதியான இலக்கு என்பது முக்கியமானது என குறிப்பிடப் படுகின்றது.