உலகில் கொரோனா பாதிப்பு 60 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 60 கோடியைக் கடந்தது.

இது குறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 546,098 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 600,358,815 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 95,331,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 6,470,926 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்