உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்!

அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 41 இலட்சத்து 68 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 அத்துடன் அங்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுறுயானோர் எண்ணிக்கை ஒரு கோடியே 56 இலட்சத்து 38 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் உலகளாவிய ரீதியில் இதுவரை இந்த வைரஸ் தொற்று காரணமாக 6 இலட்சத்து 35 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த 95 இலட்சத்து 27 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்