உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் –அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர்

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு எனஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர்அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை5.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாணஆளுனர் அனுராதா யஹம்பத்தை மட்டக்களப்பில் உள்ள அவரது பங்களாவில் விசேடசந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்களப்புவலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்தகலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதன்போது கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால்விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக பிரகடனப்படுத்தமுடியும் என அவர் எதிர் பார்ப்பதாகவும் உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாககிழக்கு மாகாணத்தை மாற்ற முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்ததுடன்.இலங்கையின் கடன் மறுசீர்ரமைப்பினை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும்சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கும் தேவையானசகல வசதிகளையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் எனஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்குமாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்