உலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும், தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58 லட்சத்தை நெருங்கி உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குகிறது. 3.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 29.33 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 53 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1,745,803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை102,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நாடுகள் வருமாறு:

அமெரிக்கா- 1,745,803
பிரேசில் 414,661
ரஷியா-370,680
ஸ்பெயின் -283,849
பிரிட்டன்- 267,240
இத்தாலி- 231,139
பிரான்ஸ்- 182,913
ஜெர்மனி- 181,895
துருக்கி- 159,797
இந்தியா- 158,086
ஈரான்- 141,591
பெரு -135,905.

முகநூலில் நாம்