உப்புச்சப்பற்ற அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம்

இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும். அது வலுவான – நிரந்தர தீர்வாக
இருக்க இருக்க வேண்டும். உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒருபோதும்
ஏற்கமாட்டோம்
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

“தீர்வுக்கான பேச்சில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவோம்.
நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்களின் விருப்பங்களை – கோரிக்கைகளை
நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையே
ஜனாதிபதியிடம் கடந்த சந்திப்புகளில் முன்வைத்துள்ளோம். அந்தக்
கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை” – என்றும் சம்பந்தன் எம்.பி.
சுட்டிக்காட்டினார்.

தமிழர் தீர்வுக்கான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில்
செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்