உணவுப் பஞ்சத்தால் இந்தியாவிடம் தஞ்சமடையும் இலங்கயர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து  ஆறு வயது சிறுவனுடன்  ஒரே குடும்பத்தை சேர்ந்த  மேலும் மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக நால்வர் அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள்  அகதிகளாக  வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வவுனிய மாவட்டத்தை சேர்ந்த  டோமினிக் (42), அவரது மனைவி சுதர்சனி(24) அவரது ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50) ஒள்ளிட்ட 4 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 5 மணி அளவில் தனுஸ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் வந்திருங்கினர்.

மணல் திட்டில் சுமார் 4 மணிநேரமாக சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் படகில் சென்று  இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்தள்ளது. அதே போல் டீசல் மற்றம் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.  
 
விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், அத்தியாவசிய  பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளதால்; இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால்  பெரியவர்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் என இலங்கை பணம் 3 லட்சம் ரூபாய்  கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்திற்;கு அகதிகளாக வந்தாக இலங்கை தமிழர்கள்  பாதுகாப்;பு வட்டார அதிகாரிகள் நடத்தி விசாரணையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நால்வரையும்; மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 96 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்