உசைன் போல்ட்க்கு கொரோனா உறுதி!

ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை விடுத்துள்ளார். 

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் ஜமைக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வந்தார்.
எனினும் சில தினங்களுக்கு முன் அவர் தன் 34வது பிறந்த நாள் விழாவை கொரோனா விற்கான எவ்வித பாதுகாப்பு நவடிக்கைகளும் முன்னெடுக்காது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியிருந்தார். இவரின் இச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்