உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

உக்ரைன் சர்வதேச விமானசேவையை சேர்ந்த இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகாமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரான கீவ்-விற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பெரிதாகியுள்ள இரான் – அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை

முகநூலில் நாம்